புதன், 1 ஜனவரி, 2014

வெல்கம் 2014

வழக்கம்போல 2014-ஆம் வருடமும் நிறைய எதிர்பார்ப்புகளுக்கும்,கனவுகளுக்கும் மத்தியில் பிறந்துள்ளது.புத்தாண்டு வாழ்த்து பதிவை நேத்தே எழுதனும்னு நினைச்சிருந்தேன்.ஆனால்,வழக்கம்போல் இந்த சோம்பேறித்தனம் வந்து மனசுக்குள் 'காப்ரே' டான்ஸ் ஆடினதால தாமதமாய் இந்தப்பதிவு.ஒருவேளை நேத்தே எழுதியிருந்தேன்னா,போன வருசத்துல நடந்த வெறுப்பேற்றிய விசயத்தையெல்லாம் சொல்லி பொலம்பியிருக்ககூடும்.ஆனால் இன்னைக்கு எழுதுறதால நோ பொலம்பல்ஸ்.பாசிட்டிவாத்தான் ஆரம்பிச்சு பாப்போமே!!


2013ஐ பொருத்தவரைக்கும் நல்ல விசயங்கள்னா அது வாசிப்பு நேரம் அதிகமாயிருக்கு.மெதுமெதுவா ஆரம்பிச்சு இந்த இலக்கிய சண்டைகள் எல்லாம் கொஞ்சூண்டு புரியிற அளவுக்கு முன்னேறியிருக்கேன்.அடுத்த டார்கெட்,நாமளும் களத்துல எறங்கி..இலக்கிய சண்டையில சட்டைய கிழிச்சிகிட்டு அலையிறதுதான்!:-p வாசிப்புன்னு சொன்னதும் ஒரு விசயம் நியாபகத்துக்கு வருது.ஆரம்ப கட்ட வாசிப்புகளை,வாத்தியாரின் எழுத்துகளில்இருந்துதான் ஆரம்பிச்சேன்.அந்த விறுவிறுப்பும்,சுவாரஸ்யமும் தான்,அதற்குப்பிறகான தொடர் வாசிப்பு ஆர்வத்திற்கு அடித்தளமா இருந்திச்சு.சோ,என்னோட சஜ்ஜசன்..புதுசா வாசிக்க ஆரம்பிக்கிறவங்க,முதலில் வாத்தியார் சுஜாதா அவர்களின் எழுத்துலிருந்து ஆரம்பிப்பது சர்வ உத்தமம்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை தமிழ் சினிமாவை மொக்க காமெடி படங்களுக்கு தாரை வாத்து குடுத்தாச்சு.இடையில வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,மூடர்கூடம்,விடியும்முன் மாதிரியான சில நல்ல படங்களும் இந்த மொக்க காமெடி அலையில சிக்கி காணாமப்போயிருச்சி.காமெடின்ற பேர்ல நம்மள டார்ச்சர் பண்ணின மொக்கை சிவாவின் படங்கள்,தேசிங்குராஜா மாதிரியான காமெடி(?) படங்களை பாத்து எனக்கு ஒரே குழப்பமாயிருச்சு.டாக்டரை போய் கன்சல்ட் பண்ணனுமோன்னு கூட நெனச்சேன்.ஏன்னா,அந்தளவுக்கு சிலமக்கள் அந்த காமெடிக்கு விழுந்துவிழுந்து சிரிச்சாங்க.என்னகொடும சார் இதுன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்க வேண்டியதாயிடுச்சி.ஒருவழியா கடசியா வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா செம பல்ப்பு வாங்கி வயித்துல பீரை வாத்துச்சி:)இந்த வருசமாச்சும் இந்த கொடுமையில இருந்தெல்லாம் தப்பிக்க முடியுதான்னு பாப்போம்.

அப்புறம் இந்த சகாபக்கங்கள் ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது.அதிகமாவும்,உருப்புடியாவும் எதுவும் எழுதலைன்னு எனக்கே தெரியிது.இந்த வருசத்திலிருந்து நிறைய எழுத முயற்சிக்கலாம்னு இருக்கேன்(ஆரும் தப்பிக்கமுடியாது)..எந்த வருசமும் நியு இயர்க்கு பெருசா  Resolutionலாம் எடுத்ததில்ல(நம்மளபத்தி நமக்கு தெரியாதா?!)..ஆனா இந்த தடவ சில பல உறுதிகள் எடுத்திருக்கிறேன்.பாப்போம்..எத்தனை நாளைக்கு கரெக்டா செய்யமுடியிதுன்னு..ஸ்டார்டிங் நல்லா இருக்குற மாதிரியே ஃபினிஷிங்கும் நல்லாயிருக்கனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.நண்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக