ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மதயானைக்கூட்டம்/சூப்பர் சிங்கர் -ஃபுல் மீல்ஸ்05/01/14


இன்றோடு சகா பக்கங்கள் ப்ளாக் ஆரம்பிச்சு,ஒருவருஷம் ஆகிடுச்சி!!இந்த ஒருவருசத்துல உருப்படியா எதும் எழுதியிருக்கிறேனான்னு தெரில.ஆனா இனி வரும் நாட்களில் நிறைய,அதே சமயத்துல கொஞ்சம் கன்சிஸ்டன்ஸியோடும் எழுத ஆசையிருக்கு.எப்போதும்போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு பயணத்தை தொடர்கிறேன்:)

பார்த்த படம்: மதயானைக்கூட்டம் 

என்னது சிவாஜி செத்துட்டாரான்ற ரேஞ்சுல ஃபீல் பண்ணாதீங்க.இந்தப்படம் பாத்ததும் சில விசயங்கள் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சி.அவ்வளவே!தமிழ்சினிமாவுக்கு இன்னும் ஒரு  தேவர் சமூகத்த பத்தின  படம்.டைரக்டர் விக்ரம் சுகுமாரனுக்கு இது முதல் படமாம்!



தெக்கத்தி பக்க கள்ளர் மக்களின் வாழ்கையை,அவர்களுடைய கல்யாணம் முதல் இறப்பு வரையிலான அத்தனை சடங்குகளையும் செம டீடெயில்டா காமிச்சியிருக்குறாரு..படம் பாக்குறப்ப அடிக்கடி தேவர்மகன் படம்தான் மைண்ட்ல வந்துச்சி!கிட்டத்தட்ட அதேமாதிரியான ஒரு களம்.அதே மாதிரியான கவுரவத்திற்க்காகவும்,குடும்ப பகைக்காகவும் நடக்கும் பழிவாங்கல்கள்.ஆனா தேவர்மகனை விட இந்த படத்துல வன்முறை மிக அதிகம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதட்டத்தோடவே பார்த்த படம் இது.படத்தோட கதை இதான்,ஜெயக்கொடிதேவர்ன்னு ஊர் பெரியவரு.அவருக்கு இரண்டு மனைவிகள்.மூத்த சம்சாராமாய் நடிகை விஜி.இளைய சம்சாரத்தின் மகனாக ஹீரோ கதிர்.மூத்த குடும்பத்துக்கும்,இளைய குடும்பத்திற்கும் இடையேயான பங்காளிக தகராறு.இந்த ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவான ஒரு எதிரி.ஜெயக்கொடி தேவர் எதிர்பாரமால் இறந்ததும் ஆரம்பிக்கிது உரிமைப்போர்.சாவுவீட்ல விஜியின் மகனாய் நடித்தவரின் வெட்டிவாய் சவாடாலில் ஒரு கொலை விழ,அந்த பழி ஹீரோ கதிரின் மேல் விழுகிறது.அதுக்கு கதிரை பழிக்குபலி வாங்க நடக்கும் முற்சிகளும்,கடைசியில் பலி வாங்கப்பட்டரா இல்லையா என்பதை, பின்பாதி முழுக்க ரத்தம் தெறிக்கதெறிக்க சொல்லி முடித்திருக்கிறார்கள்.அதுவும் கிளைமேக்ஸும் அதற்கு முந்தைய காட்சிகளும் இப்படிஎல்லாம் நடக்குமா?அல்லது இப்படியும் மனிதர்களா என யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.என்னைப்பொறுத்தவரை, மதயானைகூட்டம் டைரக்டரின் மெனக்கெடல்களுக்காகவும்,விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.எனக்கு பிடிச்சிருந்துச்சி! 


சூப்பர் சிங்கர்:

விஜய் டிவில வர்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் மிஸ் பண்ணாம பார்க்கிற ஒரு ப்ரோக்ராம்.சவசவன்னு போயிகிட்ருந்த போட்டி, டாப் 10க்கு அப்புறம் இப்பதான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.அதும் போனவாரம் சிறப்பு விருந்தினரா ரஹ்மான் வந்திருந்த ப்ரோக்ராம்..வாவ்,செம!



இசையில எல்லா உச்சமும் தொட்டாச்சு,இனி வாங்குறதுக்கு எந்த விருதுகளும் இல்லை.அந்தளவுக்கு சாதனைகள் பண்ணிட்டு,இவரால எப்படித்தான் இவ்ளோ அடக்கமாவும்,அமைதியாவும் இருக்கமுடியிதோ?!இந்த பாவனா புள்ள,நமக்கே எரிச்சல் வர்ற அளவுக்கு அவரை புகழ்ந்து தள்ளுது,பத்தாததுக்கு அங்க சுத்தி இருக்கவங்கள்ல இருந்து சச்சின் வரைக்கும் ஆளாளுக்கு இவரை பத்தி பெருமையா பேசுறாங்க.ஆனா இவரோ,யாரைபத்தியோ பேசுறமாதிரி எல்லாத்தையும் ஒரு சின்ன ஸ்மைலியோட கடந்து போயிடுறாரு.இந்த குணத்தால தானோ என்னவோ,இன்னமும் அவரால அந்த உயரத்தை தக்க வச்சிகிட்டு இருக்கமுடியுது போல.ரஹ்மானின் இசை மட்டுமல்ல ரஹ்மானும் ஸ்பெஷல் தான்!

எல்லாம்சரிதான்,ஆனா சூப்பர் சிங்கர் பாக்குறப்ப,அடிக்கடி இது தமிழ் ப்ரோகிராம்தானா?இல்லை மலையாள ப்ரோக்ராம் எதுவமான்னு டவுட் வருதே?ஏன் அப்படி?! இதே பிரச்சனை உங்க ஆருக்காச்சும் இருக்குதா? :-p

தன்னம்பிக்கை டானிக்:

எல்லாரும் சம்பாதிக்கிறோம்,செலவு பண்றோம்...மறுபடி சம்பாதிக்க ஓடிகிட்டேயிருக்கோம்.யாருக்கும் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்க ஒரு நொடி கூட நேரமில்ல.நான்,எனக்கு இதைத்தாண்டி வேறேதையும் அதிகம் யோசிக்கிறதுமில்ல,என்னையும்சேத்து தான்.


ஆனா இந்த வீடியோவை பாத்ததுக்கு அப்புறம் எனக்குள்ளையே நிறைய கேள்விகள்.இந்தமாதிரி இளைஞர்கள் தான் இப்போ இங்க தேவை.ஹாட்ஸ் ஆப் யூ மேன்!யூ ஆர் மை இன்ஸ்ப்ரேசன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக