எத்தனையோ படங்களை நாம கடந்து வந்திருப்போம்..அதுல சில படங்கள் மட்டும் தான் நமக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமாவும்..அதைபத்தி நெறய யோசிக்கிற மாதிரியும்,அந்த கதாபாத்திரங்கள் நமக்குள்ளேயே கொஞ்சநாள் சுத்திகிட்டுருக்க மாதிரியும் இருக்கும்..அந்த மாதிரியான,சட்டுன்னு எளிதில் கடந்திட முடியாத ஒரு கதை..அதை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லிய உத்தி..மனிதர்களை விட அன்பும் பாசமும் கொண்ட மிருகங்கள்-னு Life of Pi சுவாரஸ்யமான அனுபவம்தான்..
என்கிட்டஉள்ள பெரிய பிரச்சனை என்னான்னா,கடல் மாதிரியான மொக்கை தமிழ் படங்களை கூட உடனக்குஉடன் பார்த்துடுவேன்..ஆனா,சில நல்ல படங்களை வேற மொழின்ற காரணத்துக்காகவே,அதை பாக்குறதுல அதிக ஆர்வம் இருக்குறதில்லை..என்ன பண்றது?!என்னதான் இன்னைக்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசினாலும்..நாமெல்லாம் ஒருகாலத்துல ராமாராஜன் படம் பார்த்து வளர்ந்தவய்ங்க தானே?!:) எப்பவோ இந்த படத்த டவுன்லோடிட்டாலும் பாக்குறதுக்கு வாய்ப்பே அமையலே..இந்தவாரம் ரொம்ப போரடிக்கவே,சரி பாப்போமேன்னு சும்மா ஆரம்பிச்சு ரெண்டுமணி நேரம் போனதே தெரியாம பார்த்தேன்!
இனி..படம்..
படத்தின் ஆரம்பமே பாம்பே ஜெயஸ்ரீ-யின், 'கண்ணே கண்மணியே'ன்னு தமிழ் பாட்டோட ஆரம்பிக்க இன்ப அதிர்ச்சி..!படம் பாண்டிச்சேரியில்தொடங்குகிறது..பாண்டியில், மியூசியம் நடத்திக்கிட்டு இருக்காரு அடில் ஹுசைன்..அவர் மனைவியாக தபு! அவர்களுக்கு இரண்டு மகன்கள்..கதையின் நாயகனாக இளையமகன் சுராஜ் ஷர்மா..ஒருகட்டத்தில் அந்த மிருககாட்சி சாலையை விற்கமுடிவு செய்கிறார்கள்.அதில் உள்ள விலங்குகளை மட்டும் தங்களோடு கனடாவிற்கு கூட்டிசென்று அங்கே விற்றுவிடும் யோசனையுடன் நால்வரின் கப்பல் பயணம் தொடங்கிகிறது!
இடையில் சுராஜின் பள்ளிபருவம்,சுராஜிக்கும் அனிதா என்ற பெண்ணிற்குமான காதல் இவையெல்லாம் அழகிய ஹைகூவாய் சொல்லபடுகிறது.கப்பல் பயணத்தில் திடீரென ஏற்படும் புயல் காற்றால் கப்பல் கடலில் மூழ்க,அதிலுருந்து நாயகனும் கப்பலில் இருந்த சில மிருகங்களும், படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரமான பெங்கால் புலியும் மட்டும் ஒரு படகில் தப்பிக்கின்றார்கள்.சந்தர்ப்ப சூழலால் மற்ற மிருகங்கள் இறந்துவிட அந்த நடுக்கடலில் மிச்சமிருப்பது நாயகனும்,புலியும் மட்டுமே!
முதலில் மிருகத்துக்கே உண்டான மூர்க்க குணமும்..மனிதனின் இயல்பான பயந்தசுபாவமும் ஒத்துபோகாமல் இருக்க..பின் கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்குள் ஏற்படும் புரிதல் அற்புதம்.
இனி இருவரும் இந்த கடலிலேயே மடியப்போகிறோம் என்ற நிலை வருகையில் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை.வாழ்க்கைக்கும் சாவிற்குமான அந்த தருணங்களில் ஹீரோவின் நடிப்பு அருமை!
படத்தின் சுவாரஸ்யங்களில் சில:
இந்த படத்த பாத்திட்டு இருக்கும்போது மனசுல தோணினதுஇதுதான்!இந்தளவுக்கு தன்னம்பிக்கையோட யாராலையும் போராடமுடியுமா-ன்றது தான்!
தபுவை பாக்குறப்போ ஒண்ணேஒன்னு தான் தோணுது..எவ்வளவு பெரிய சூப்பர் ஃபிகரா இருந்தாலும்,அதுவும் ஒரு நாளைக்கு ஆன்ட்டி ஆகியே தீரும்!இது உலக நீதி:(
அப்புறம் நம்மநடிகர் திலகம் சிவாஜியின் வசந்தமாளிகை பட போஸ்டரை ஒரு சீன்ல காமிக்கிறாங்க!இறந்தும் ஹாலிவுட்டில் நடிக்கிறார்நடிகர் திலகம்!
இந்தப்படம் ஆஸ்கருக்கு பலபிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது!பாம்பே ஜெயஸ்ரீ-யும்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்..விருதகளை அல்ல வாழ்த்துகள்.
படக்குழுவினர் விபரம்:
இந்த படத்தை 3D யில் பார்த்தால் அருமையாய் இருக்கும்..கண்டிப்பா மிஸ் பண்ணகூடாத ஒரு படம்..மறக்காம உங்க கருத்துகளை சொல்லுங்கள்..
சகா..

Directed by | Ang Lee |
---|---|
Produced by | Gil Netter David Womark |
Screenplay by | David Magee |
Starring | Suraj Sharma Irrfan Khan Tabu Adil Hussain Gerard Depardieu Rafe Spall |
Music by | Mychael Danna |
Cinematography | Claudio Miranda |
Editing by | Tim Squyres |
Studio | Rhythm & Hues Fox 2000 Pictures |